Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கரைபுரண்டு ஓடிய வெள்ளம்….. தாய்-மகளுக்கு நடந்த விபரீதம்…. கோவையில் பரபரப்பு…!!

வெள்ளத்தில் சிக்கி தாய் மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் வனப்பகுதிக்குள் பவானி ஆற்றின் குறுக்கே பில்லூர் அணை இருகின்றது. இந்த அணையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக திறக்கப்படும் தண்ணீரானது மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக பவானி ஆறு மூலம் பவானிசாகர் அணைக்கு செல்கிறது. இந்த ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் நேரம் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் குளிக்க செல்லும் மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் சக்திவேலின் மனைவியான சங்குபதி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சங்குபதி தனது மகள் கவிதா மற்றும் பேத்தி ரித்திகா போன்றோருடன் பவானி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயம் பில்லூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அங்கிருந்தவர்கள் வெள்ளம் வருகிறது என்று கத்தியுள்ளனர் ஆனால் குளித்துக்கொண்டிருந்த மூன்று பேரும் அதனை கவனிக்கவில்லை. இதனை அடுத்து வெள்ளம் வருவதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சங்குபதி தனது மகள் மற்றும் பேத்தியுடன் கரைக்கு ஓடி வர முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அதற்குள் 3 பேரையும் வெள்ளம் இழுத்துச் சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் ஆற்றுக்குள் குதித்து சிறுமியான ரித்திகாவை மட்டும் உயிருடன் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சங்குபதி மற்றும் கவிதா ஆகியோரின் சடலத்தை மீட்டனர். அதன் பிறகு காவல் துறையினரின் அவர்களின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |