வன அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆலப்பட்டி வணவராக அருள்நாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மணி, நாகப்பன், செல்வம், சேகர் ஆகிய 4 பேரும் வனப்பகுதியில் இருந்த மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த வனவர் அருள்நாதன் அவர்களை கண்டித்துள்ளார்.
அதனை பொருட்படுத்தாமல் 4 பேரும் வெட்டப்பட்ட மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது வனகர் அருள்நாதன் அதனை தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கோபமடைந்த 4 பேரும் அருள்நாதனை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அருள்நாதன் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சேகர், மணி, செல்வம், நாகப்பன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.