Categories
அரசியல் தேசிய செய்திகள்

18 எதிர்கட்சிகள்… “வியூகம் வகுக்கும் காங்கிரஸ்”… ஆலோசனையில் சோனியா காந்தி…!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்கட்சி தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்கட்சி தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ தேசிய செயலர் டி ராஜா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்..

Image

மத்திய அரசுக்கு எதிராக எப்படி எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவது மற்றும் 2024 மக்களவைத் தேர்தல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேளாண் மசோதா குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.. மேலும் தற்போதைய முக்கிய பிரச்சனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என  காங்கிரஸ் சார்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது..

மத்திய இருக்கக்கூடிய பாரதிய ஜனதா அரசு தனிப்பெரும்பான்மையுடன் இருப்பதால் தான் மசோதாக்களை மழைக்கால கூட்டத்தொடரில் எளிதில் நிறைவேற்றுகிறது.. இதனால் வர இருக்க  கூடிய அனைத்து சட்டமன்ற தேர்தல்களில் மத்திய அரசுக்கு ஒரு கடுமையான சவால்கள் அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு பல்வேறு வியூகங்களை வகுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது..

 

Categories

Tech |