உளுந்து சட்னி
தேவையான பொருட்கள் :
உளுந்தம்பருப்பு – 3 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
பூண்டு – 1
புளி – சிறிது
வெல்லம் – சிறிது
தேங்காய் துண்டுகள் – 3
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும் .பின் இதனுடன் தேங்காய் துண்டுகள் , புளி , பூண்டு , வரமிளகாய் சேர்த்து வதக்கி ஆறவிட்டு உப்பு , வெல்லம் சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான உளுந்து சட்னி தயார் !!!