Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா இவரா..!! ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்… செம அப்டேட்…!!!

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நடிக்க இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Shivani Narayanan on Twitter: "Man of Simplicity ? #VijaySethupathi ?  #vjs… "

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஷிவானி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |