குக் வித் கோமாளி பிரபலம் தீபா ஷங்கரின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சிசன்-2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இதில் அஸ்வின், மதுரை முத்து, ஷகிலா, பாபா பாஸ்கர், கனி, பவித்ரா, தர்ஷா குப்தா, தீபா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருந்தனர். மேலும் புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா, சரத், சக்தி உள்ளிட்டோர் கோமாளிகளாக வந்து அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் குக்காக கலந்துகொண்ட தீபா தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி சிங்கம் போன்ற பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன்- 3 நிகழ்ச்சியில் தீபா தனது கணவர் ஷங்கருடன் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் தீபா ஷங்கரின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் அவர் மிகவும் ஒல்லியாக இருப்பதால் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘தீபா அக்காவா இது ?’ என ஆச்சரியமடைந்துள்ளனர்.