ஆப்கான் தலிபான்களின் தொடர் தாக்குதலுக்கு வெளிநாட்டு தலிபான் போராளிகள் தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகியதால் தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனிடையே கடந்த வாரத்தில் 11 முக்கிய மாகாணங்களின் தலைநகரையும் கைப்பற்றினர்.மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரான காபூலையும் கைப்பற்றினர். இதனிடையே ஆப்கானை தலிபான்கள் ஆக்கிரமித்ததை தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் தலிபான்களின் அதிவேக தாக்குதல்களுக்கு வெளிநாட்டு தலிபான் ஆதரவு தான் காரணம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வரும் வாரங்களில் வெளிநாட்டு போராளிகள் ஆப்கானை வந்தடைவார்கள் என்றும் அவர்கள் மிகவும் கொடுமையானவர்கள் என்றும் தலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.