ஆப்கானிஸ்தானில் அடைக்கப்பட்ட இந்திய தூதரகங்களில் தலிபான்கள் நுழைந்து சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் தூதரகத்தையும், மஷார்-இ-ஷெரீஃப், ஜலாலாபாத், காந்தஹார், ஹீரட் போன்ற நகர்களில் துணை தூதரகத்தையும் செயல்படுத்தி வந்தது. தற்போது தலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ளதால், காந்தஹார் மற்றும் ஹெராட் நகர்களில் இருக்கும் இந்திய தூதரகங்கள் அடைக்கப்பட்டது.
இந்நிலையில், காந்தஹாரில் இருக்கும் தூதரகங்களின் பூட்டுகளை உடைத்துக்கொண்டு தலீபான்கள் நுழைந்ததாகவும், அங்கு ஆவணங்கள் மாட்டுகிறதா? என்று பார்த்துவிட்டு அதிகாரிகள் பயன்படுத்த நின்ற வாகனங்களை எடுத்துச்சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
இதேபோன்று ஹெராட் நகரத்திலும், இந்திய தூதரக வளாகத்தில் நின்ற வாகனங்களை அவர்கள் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் காபூலில் இருக்கும் தூதரகம் தொடர்ந்து இயங்கி வருகிறது. மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க அங்கு தூதரகம் திறக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.