Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆட்டுக்குட்டி கேட்ட சிறுவன்….. மகனை கண்டித்த பெற்றோர்….. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

ஆட்டுக்குட்டி வாங்கி தராததால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு மாதவி கிராமத்தில் தர்மராஜ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவரது மனைவி கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு கௌதம் என்ற 11 வயது மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றினால்  வீட்டில் இருந்த கௌதம் வளர்ப்பதற்காக ஆட்டுக்குட்டி வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து தான் கேட்ட ஆட்டுக் குட்டியை வாங்கி தருமாறு கௌதம் பிடிவாதமாக இருந்ததால் சிறுவனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கௌதம் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |