டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் வாழ்வுரிமை கட்சி சார்பாக டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தொலைபேசி நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளரான சரவணன் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்த மாநில நிர்வாகி டாக்டர் முனிரத்தினம், மகளிரணி, நிர்வாகிகள் மதுபாலா, மணிலா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சரவணன் மற்றும் மாநில துணை பொதுச்செயலாளர் தவமணி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். அதன்பின் நகரச் செயலாளரான சீனிவாசன் வரவேற்றுள்ளார்.
பின்னர் மாநில ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் குமரேசன் மற்றும் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக கனல்கண்ணன் போன்றோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியுள்ளனர். அதில் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்ற டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வுகளை கட்டுப்படுத்த வேண்டுமென கூறியுள்ளனர். இதில் சமையல் சிலிண்டர் விலைகளையும் குறைக்க வேண்டுமென அவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து மேகதாது அணை கட்டும் முயற்சிகளை கர்நாடக அரசு நிறுத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் நிதி ஆதாரங்களை தடுத்து நிறுத்த நினைக்கின்ற கர்நாடக அரசின் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி உள்ளனர்.