கும்பம் ராசி அன்பர்களே.! கவலையை விட்டுவிட்டு எந்த பணியிலும் ஈடுபட வேண்டும்.
இன்று முன்யோசனையுடன் செயல்பட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதலான பணி இருக்கும். அதிகப்படியான பணி சுமை இருக்கும். குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். தவிர்க்க முடியாத வகையில் செலவுகள் இருக்கும். செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். சிந்தனையை மட்டுப்படுத்த வேண்டும். உற்சாகமாக இருக்க வேண்டும். சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் கண்டிப்பாக மாறிவிடும். சுமுகமான சூழ்நிலை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறைந்து விடும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல விதத்தில் நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வரும். சிறு முயற்சி மட்டும் எடுக்க வேண்டும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். கவலையை விட்டுவிட்டு எந்த பணியிலும் ஈடுபட வேண்டும்.
நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடக்கும். சின்ன விஷயத்தில் காலதாமதம் ஏற்படும். அதனை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். காதலின் நிலைபாடுகள் கொஞ்சம் கசக்கும் படியாக இருக்கும். விட்டுக்கொடுத்துதான் செல்ல வேண்டும். மாணவர்களுக்கு தெளிவான முடிவுகள் எடுக்க கூடிய அம்சம் இருக்கின்றது. உயர்கல்விக்கான முயற்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு நடந்துகொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு