அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 19 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் காஷ்மீரில் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதுமாக சீக்கிரம் செயல்படுத்த வேண்டும்.
பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர், சமையல் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 20 முதல் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளனர். நாடு தழுவிய போராட்டத்தில் பத்து நாட்கள் அனைத்து மாநிலங்களும் திணறும் என்று கூறப்படுகிறது.