தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. இதைக்கிடையில் பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் பள்ளி கல்லூரிகளை திறக்க தமிழாக அரசு அனுமதியளித்துளளது. இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் ஆன்லைன் அல்லது ஆப்லைனில் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்த வே ண்டும். +2 மதிப்பெண் சான்றிதழ், இதர சான்றிதழ்களை உறுதி செய்யவும், வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை பின்பற்றவும் உத்தரவிட்டுள்ளது.