ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பயத்தில் வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், “ஆப்கானில் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். மக்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம்.
எங்களுடைய ஆட்சியில் பெண்களுடைய உரிமை பாதுகாக்கப்படும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஷரியத் சட்டப்படி உரிமைகள் வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான அடக்கு முறையில் நாங்கள் ஈடுபட மாட்டோம். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்களை மேம்படுத்த நாங்கள் உதவுவோம்.. பொருளாதாரத்தை மேம்படுத்துவோம். ஆப்கானிஸ்தானில் தனியார் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படலாம். பத்திரிக்கை ஊடகங்கள் நடுநிலையாக செயல்படவேண்டியது அவசியம் கிடையாது என்று தாலிபான்கள் உறுதியளித்திருந்தனர்.
இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவன தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரியும் ஷப்னம் என்பவர் வழக்கம் போல தன்னுடைய பணியை செய்வதற்காக அலுவலகம் சென்றுள்ளார். அப்போது தாலிபான்கள் “நீ ஒரு பெண் வீட்டுக்கு போ. ஆட்சி மாறி விட்டது. இனி இதுதான் கட்டளை” என்று தெரிவித்துள்ளனர். இதனால் அந்தப் பெண் செய்வதறியாது வீட்டுக்கு திரும்பியுள்ளார்.