ஆப்கானிஸ்தானில் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் 2 இந்திய தூதரகங்களை சூறையாடி கார்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தூதரகத்தையும், காந்தஹார், ஹிர்ட் உள்ளிட்ட பல நகரங்களில் துணைத் தூதரகங்களையும் இந்தியா இயக்கி வந்தது.
இந்நிலையில் காந்தஹார், ஹிர்ட் நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு புகுந்த தலிபான்கள் ஆவணங்களைத் தேடி எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு விட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தூதரக வளாகங்களில் அதிகாரிகள் பயன்பாட்டுக்காக நிறுத்தப்பட்டிருந்த கார்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். வெளிநாட்டவர்கள் பயமின்றி வெளியேறலாம், யாரையும் அச்சுறுத்தும் எண்ணம் இல்லை, தூதரகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என தலிபான்கள் உறுதி அளித்த நிலையில் ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.