ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபின், பெண் பத்திரிகையாளர்கள் பணியாற்றுவதற்கு தடைவிதித்துள்ளனர். இதனால் தாங்கள் பணியாற்றும் இடத்துச் செல்ல முடியாமல் பெண் பத்திரிகையாளர்கள் தவிக்கின்றனர். ஆப்கனில் நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளிேயறத் தொடங்கியபின் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். காபூல் நகரில் நுழைந்தவுடன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிட்டார்.
இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்களை பணிக்குச் செல்லவிடாமல் தலிபான்கள் தடை விதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அலுவலகத்துக்கு செல்லும் பெண் பத்திரிக்கையாளர்களை வழியில் இருந்து தடுப்பதாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.