ஐபிஎஸ் மற்றும் மத்திய படை பிரிவுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 4% இட ஒதுக்கீட்டை ரத்துசெய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படை பிரிவுகளில் அலுவலக பணிகள், தடைய அறிவியில், சைபர் பிரிவு உள்ளிட்ட பரிவுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வந்தது. அதேபோல், ஐபிஎஸ் பணிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கபட்டு வந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து “மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய படை பிரிவுகளில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளதற்கு எனது கடுமையான கண்டனங்கள். உடனடியாக இந்த உத்தரவை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும்” என்ற ஜோதிமணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.