நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் :
அனைவரையும் கவரக்கூடிய மேஷம் ராசி அன்பர்களே..!! தேவையற்ற கோபத்தால் இன்று குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். மனைவியின் கழகத்தால் உறவுக்குள் குழப்பங்கள் ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலம் ஏற்படும். இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களிடம் ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். கணவன்- மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் கொஞ்சம் ஏற்படும். கவனமாக பேசுங்கள் அது போதும்.
பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்லுங்கள். எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை கொடுக்கும். பணவரவு சீராக இருக்கும். மனம் ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைகுட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதே போலவே இன்று காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரத்தை வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்
ரிஷபம் :
எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று நவீன வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கும். வருமானங்களும் உங்களுக்கு இரட்டிப்பாக இருக்கும். அரசு வங்கிகளில் எதிர்பார்த்த கடன்கள் தாமதமின்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக கிடைக்காத பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை கொடுக்கும். கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டியதிருக்கும். வேலை செய்பவர்கள் மேலிடத்தில் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். உங்களது கருத்துக்களை தெரிவிக்கும் போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை, தாமதம் போன்றவை ஏற்படும்.
கவனம் இருக்கட்டும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் ஓரளவு முன்னேற்றத்தை பெறக்கூடும். இருந்தாலும் படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பார்ப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். சக மாணவர்களிடம் பழகும் போது கவனமாக பழகுங்கள். கொஞ்சம் பொறுமையை கையாளுங்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அல்லது கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பை கொடுக்கும். முடிந்தால் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியங்களும் சிறப்பாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கை வெற்றி பெறக் கூடியதாக இருக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்
மிதுனம் :
அனைவரையும் தனது பேச்சாற்றலால் கவரக்கூடிய மிதுன ராசி அன்பர்களே..!! இன்று வெளியூர் பயணங்களில் தடங்கல்களும் முக்கிய காரியங்களில் தடைகளும் கொஞ்சம் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கைக்கு கிட்டாத வெற்றியால் கவலைகள் எழக்கூடும். சகோதரர்களால் அதிக உதவிகள் கிடைக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத் தேவை இன்று இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாகத்தான் பணியாற்ற வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று குடும்பத்தில் ஓரளவு கலகலப்பு இருக்கும். நட்பால் ஆதாயம் இருக்கும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது, முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் சூரிய பகவானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அணைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்
கடகம் :
பேச்சாற்றல் மூலம் அனைவரையும் கவரக்கூடிய கடகராசி அன்பர்களே..!! உங்களுக்கு அனைத்து விஷயங்களும் இன்று சிறப்பாகவே இருக்கும். வேலைப்பழு காரணமாக வேலைக்கு உணவு அருந்த முடியாமல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். இன்று பணவரவு கூடும் ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்பொழுது கிடைக்கும். திடீர் மன வருத்தங்கள் கொஞ்சம் ஏற்படக்கூடும். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள். கவனம் இருக்கட்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையாக செல்வது நல்லது. எல்லா நன்மைகளும் இன்று ஓரளவு கிடைக்கும். மனதில் இருந்த துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும்.
மனதில் கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்றைய நாளை நீங்கள் மிகப் பொறுமையாக கடப்பது அவசியம். பேசும் போது நிதானம் இருக்கட்டும். கோபம் கொஞ்சம் தலை தூக்கும். காரியங்களில் மட்டும் வெற்றி இருக்கும். பேச்சாற்றலால் அனைவரையும் கவரும் விதமாக பேசி அவர்களின் மூலம் நீங்கள் காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். இன்று குடும்பத்தாருடன் மாலை நேர வேலையில் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது சிவப்பு நிற ஆடையை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கும். முடிந்தால் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்
சிம்மம் :
தனது கண் பார்வையால் அனைவரையும் வசீகரிக்க கூடிய சிம்மம் ராசி அன்பர்களே.!! இன்று உங்களுக்கு அதிக தனலாபம், எதிர்ப்பாளரால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்களும் ஏற்படும். மனத் தெம்பும் மகிழ்ச்சியும் நிலவும். தொழில் ஆர்வம் கூடுவதால் ஆதாயம் பிறக்கும். இன்று குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக தான் கிடைக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டியிருக்கும். சகோதர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
செய்யும் காரியத்தை சிறப்பாகவும் நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்று சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். செல்வ நிலை உயரும். செல்வாக்கு கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிற ஆடையோ அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் இன்று காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து காரியமும் வெற்றி பெறும். நீங்களும் மனமகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்
கன்னி :
எதையும் துணிச்சலோடு எதிர் கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே..!! இன்று மனதில் சந்தோசம் இருக்கும். எடுத்த காரியங்கள் தடைபடுவது கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். உங்களுக்கான சரியான நேரம் வரும் வரை காத்திருங்கள். முயற்சிகள் ஓரளவு திருவினையாக்கும். எனவே முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெருங்கள். இன்று புதிய நபர்களின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய உடல் நிலையில் நீங்கள் கவனம் கொள்வது நல்லது. ஒவ்வாமை உணவுகளை நீங்கள் உண்ண வேண்டாம். ஏற்கனவே செய்த செயல் குறித்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். பயணங்கள் செல்லும்போது உடமைகள் மீது கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.
பார்த்து செல்லுங்கள். சில நேரங்களில் உங்களுக்கு திடீரென்று குழப்பமான சூழ்நிலை ஏற்படலாம். ஆகையால் நீங்கள் பொறுமையை கையாளுவது மிகவும் சிறப்பு. தந்தையின் உடல்நிலையில் கவனம் இருக்கட்டும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். இன்று உங்களின் தன்னம்பிக்கையையும் திறமையும் வெளிப்படும் நாளாகவே இருக்கும். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே முடிந்தால் காக்கைக்கு அன்னமிட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்
துலாம் :
நேர்மையான எண்ணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே..!! இன்று பல வழிகளிலும் தனலாபம் ஏற்படும். ருசியான நல்ல உணவை நீங்கள் உண்டு மகிழ்வீர்கள். இன்று புத்தாடைகள் ஆகியவை கிடைக்கும். புத்தாடைகள் வாங்க கூடிய சூழல் இருக்கும். கிடைக்கும் பணத்தை வைப்புநிதியாக போட்டு வைப்பது நல்லது. அதாவது சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம். அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். எதிர்ப்புகள் விலகி செல்லும். எல்லா வகையிலும் நன்மை இருக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும்.
நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். குடும்பத்தில் கலகலப்பு, மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலையை சந்திக்கக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்வது மிகவும் நல்லது. சக மாணவர்களிடம் பழகும்போது கொஞ்சம் ஒற்றுமையாக பழகுங்கள். பேசும்போது நிதானமாகப் பேசுங்கள். இன்று விளையாட்டு துறையில் நல்ல வெற்றி வாய்ப்பு கிடைக்கும். முடிந்தால் இன்று முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்
விருச்சிகம் :
நேர்மையான எண்ணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று பல வழிகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் சந்திப்பு தெய்வ பக்தியாலும் மனதில் நிம்மதி கூடும். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெறுவதற்கு கடினமாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலனை கொடுக்காமல் கூட போகலாம். நீங்கள் பொறுமை காப்பது இன்று மிகவும் நல்லது. வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். தொலைதூர தகவல்கள் நல்ல தகவலாகவே வந்து சேரும்.
பயணங்கள் செல்ல நேரிடும். பயணங்கள் செல்லும் பொழுது தூங்காமல் செல்லுங்கள். உங்கள் பொருட்கள் மீது ஒரு கவனம் இருப்பது நல்லது. இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடையக்கூடும். ஆசிரியர்கள் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். படித்த பாடத்தை எப்பொழுதும் நாங்கள் சொல்வது போலவே ஒருமுறைக்கு இருமுறை எதிர்பார்ப்பது உங்கள் மனதில் நினைவில் வைத்துக் கொள்ள உதவும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது அல்லது முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். உங்களுடைய அனைத்து காரியங்களும் சிறப்பாக இருக்கும். முடிந்தால் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்
தனுசு :
எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே.!! இன்று இன்பம் நிறைந்த இனிய நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கும். விருப்பம்போல் வீட்டில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று சாதகமான பலன்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மற்றவர்கள் பாராட்ட கூடிய மிகப்பெரிய செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்று சமூகத்தில் அந்தஸ்து உயரும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைகுட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். முடிந்தால் காக்கைக்கு அன்னமிட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்
மகரம் :
அனைவரையும் தனது பேச்சாற்றலால் கவரக்கூடிய மகரம் ராசி அன்பர்களே.!! தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் பெருகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் நீங்கள் முன்னேறிச் செல்வீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். அவ்வப்போது மனதில் சின்னதாக பயம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.
பரபரப்பு கொஞ்சம் இருக்கும். அவசரப்படாமல் காரியத்தை மேற்கொள்ளுங்கள். இன்று காதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கும் அதை பார்த்துக்கொள்ளுங்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் பற்றிய பேச்சு வார்த்தைகளை இன்று செய்வது மிகவும் நல்லது. இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது அல்லது முக்கியமான காரியங்களுக்கு நீங்கள் மஞ்சள் நிற ஆடையை அல்லது மஞ்சள் நிற கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் காலையில் காக்கைக்கு அன்னமிட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
கும்பம் :
தனது முக வசீகரத்தால் அனைவரையும் கவரக்கூடிய கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய சொத்துக்கள் அமையும். நல்ல நண்பர்களின் நட்பால் மகிழ்ச்சி உருவாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீட்டும் திட்டங்கள் வெற்றிகரமாக அமையும். இன்று எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்லபடியாகவே நடக்கும். எடுத்துக் கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சினைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலனைக் கொடுக்கும். ஆயுதங்களை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். வீண் செலவு ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்தவருக்கு நீங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகும். உங்களை தவறான நோக்கில் பார்வை செய்வார்கள். மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் எண்ணாதீர்கள். இன்றைய நாள் ஓரளவு சிறப்பை கொடுக்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கலகலப்புக்கு எந்த குறையும் இருக்காது. மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும். முடிந்தால் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
மீனம் :
எதிலும் நேர்மையான பார்வை கொண்ட மீன ராசி அன்பர்களே.!! இன்றைக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் மன சஞ்சலங்களுக்கு குறைவிருக்காது. கூட்டாளியின் போக்கு எரிச்சலூட்டும் விதமாக இருக்கும். சிலருக்கு வழக்குகளால் வெட்டி செலவுகள் ஏற்படக்கூடும். இன்று எதிலும் கவனமாக செயல்படுவது நன்மையை கொடுக்கும். பணவரவு இன்று ஓரளவு சிறப்பாக இருக்கும். பேச்சின் இனிமை, சாதுரியம் இவற்றால் எடுத்த காரியம் நல்லபடியாகவே நடக்கும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும். தந்தையுடன் அனுசரித்துச் செல்லுங்கள். அது போதும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும் தான் வரும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் இன்று இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு என்று தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்