எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று நவீன வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கும். வருமானங்களும் உங்களுக்கு இரட்டிப்பாக இருக்கும். அரசு வங்கிகளில் எதிர்பார்த்த கடன்கள் தாமதமின்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக கிடைக்காத பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை கொடுக்கும். கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டியதிருக்கும். வேலை செய்பவர்கள் மேலிடத்தில் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். உங்களது கருத்துக்களை தெரிவிக்கும் போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை, தாமதம் போன்றவை ஏற்படும்.
கவனம் இருக்கட்டும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் ஓரளவு முன்னேற்றத்தை பெறக்கூடும். இருந்தாலும் படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பார்ப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். சக மாணவர்களிடம் பழகும் போது கவனமாக பழகுங்கள். கொஞ்சம் பொறுமையை கையாளுங்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அல்லது கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பை கொடுக்கும். முடிந்தால் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியங்களும் சிறப்பாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கை வெற்றி பெறக் கூடியதாக இருக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்