Categories
மாநில செய்திகள்

தமிழ் மக்களின் சார்பில் ஓணம் நல்வாழ்த்துகள்…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

கேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். கேரள எல்லையை ஒட்டிய கோவையிலும் அத்தப்பூ கோலம் கோயிலில் சிறப்பு வழிபாடு என ஓணம் கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் அறுவடைத் திருநாள் என கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்.

இந்நிலையில் மலையாள உடன்பிறப்புகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் ஓணம் நல்வாழ்த்துகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “அன்பிற்கும், ஈகைப் பண்பிற்கும் மிகச் சிறந்த அடையாளம் ஓணம் திருநாள்! மக்களின் அன்பைப் பெற்ற மாவலி மன்னரை அத்தப்பூ கோலமிட்டு வரவேற்கும் மலையாள உடன்பிறப்புகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் ஓணம் நல்வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |