அனைவரையும் தனது பேச்சாற்றலால் கவரக்கூடிய மிதுன ராசி அன்பர்களே..!! இன்று வெளியூர் பயணங்களில் தடங்கல்களும் முக்கிய காரியங்களில் தடைகளும் கொஞ்சம் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கைக்கு கிட்டாத வெற்றியால் கவலைகள் எழக்கூடும். சகோதரர்களால் அதிக உதவிகள் கிடைக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத் தேவை இன்று இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாகத்தான் பணியாற்ற வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று குடும்பத்தில் ஓரளவு கலகலப்பு இருக்கும். நட்பால் ஆதாயம் இருக்கும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது, முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் சூரிய பகவானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அணைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்