நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல்கேஸ் சிலிண்டர் விலை, சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பது உள்ளிட்ட 11ம் அம்ச கோரிக்கைகளை வலியுத்தி செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 30 வரையில் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக எதிர்கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சிதலைவர் சோனியா தலைமையில் 19 எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்தின.
இந்த கூட்டத்தில் வரும் 2024 ம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலைதிட்டமிடுவதற்கான நேரம் நெருங்கி விட்டது எனவும் தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டடது. தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் வரும் செப்டம்பர் 20ம் தேதி முதல் 30 ம் தேதி வரையில் 11 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது