Categories
உலக செய்திகள்

துப்பாக்கியினால் நடத்தப்பட்ட தாக்குதல்…. தொடர்ந்து அதிகரிக்கும் அராஜக செயல்….!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டின் கொடியை தனது உடலில் சுற்றிக் கொண்டு சென்ற நபரொருவரை தாக்குவது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார். இவர்கள் ஆப்கானிய பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்கள்.

ஆனால் புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்து ஊடக துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அனுமதி கொடுக்காமல் அவர்களை துரத்தியடித்துள்ளார்கள். மேலும் இவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பல கொடூர செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை தனது உடலில் சுற்றிக்கொண்டு நபர் ஒருவர் சைக்கிளில் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த தலிபான் ஒருவர் தேசிய கொடியை சுற்றிக் கொண்டு சென்ற அந்த நபரை தாக்குவது தொடர்பான காட்சி வெளியாகியுள்ளது. மேலும் மற்றொரு தலிபான் துப்பாக்கியினுடைய பின்பக்கத்தை கொண்டு ஆப்கானிய நபர் ஒருவரை அதி பயங்கரமாக தாக்குவது தொடர்பான காட்சியும் வெளியாகியுள்ளது.

Categories

Tech |