பேச்சாற்றல் மூலம் அனைவரையும் கவரக்கூடிய கடகம் இராசி அன்பர்களே..!! உங்களுக்கு அனைத்து விஷயங்களும் இன்று சிறப்பாகவே இருக்கும். வேலைப்பழு காரணமாக வேலைக்கு உணவு அருந்த முடியாமல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். இன்று பணவரவு கூடும் ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்பொழுது கிடைக்கும். திடீர் மன வருத்தங்கள் கொஞ்சம் ஏற்படக்கூடும். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள். கவனம் இருக்கட்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையாக செல்வது நல்லது. எல்லா நன்மைகளும் இன்று ஓரளவு கிடைக்கும். மனதில் இருந்த துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும்.
மனதில் கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்றைய நாளை நீங்கள் மிகப் பொறுமையாக கடப்பது அவசியம். பேசும் போது நிதானம் இருக்கட்டும். கோபம் கொஞ்சம் தலை தூக்கும். காரியங்களில் மட்டும் வெற்றி இருக்கும். பேச்சாற்றலால் அனைவரையும் கவரும் விதமாக பேசி அவர்களின் மூலம் நீங்கள் காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். இன்று குடும்பத்தாருடன் மாலை நேர வேலையில் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது சிவப்பு நிற ஆடையை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கும். முடிந்தால் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்