தமிழகத்தில் வரும் திங்கட்கிழமையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, 50% இருக்கைகளுடன் தியேட்டர் தீர்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா 3வது அலை குறித்தும் ஆலோசனை நடத்துகின்றனர்.