Categories
உலக செய்திகள்

“குழந்தையையாவது காப்பாற்றுங்கள்” மனதை உலுக்கும் புகைப்படம்…!!!

ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து அங்கிருந்து மக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இதனால் விமான நிலையங்களில் கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்கள் வெளியாகி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த அமெரிக்க விமானத்தில் ஏற ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் குவிந்தனர். அப்போது ஒரு பெண் தன்னுடைய குழந்தையையாவது காப்பாற்றுங்கள் என்று அமெரிக்க படைவீரர்களிடம் குழந்தையை ஒப்படைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |