Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “மனதில் சந்தோசம் இருக்கும்”… முயற்சிகள் திருவினையாக்கும்..!!

எதையும் துணிச்சலோடு எதிர் கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே..!! இன்று மனதில் சந்தோசம் இருக்கும். எடுத்த காரியங்கள் தடைபடுவது கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். உங்களுக்கான சரியான நேரம் வரும் வரை காத்திருங்கள். முயற்சிகள் ஓரளவு திருவினையாக்கும். எனவே முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெருங்கள். இன்று புதிய நபர்களின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய உடல் நிலையில்  நீங்கள் கவனம் கொள்வது நல்லது. ஒவ்வாமை உணவுகளை நீங்கள் உண்ண வேண்டாம். ஏற்கனவே செய்த செயல் குறித்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும்.

பயணங்கள் செல்லும்போது உடமைகள் மீது கொஞ்சம் கவனம் இருக்கட்டும். பார்த்து செல்லுங்கள். சில நேரங்களில் உங்களுக்கு திடீரென்று குழப்பமான சூழ்நிலை ஏற்படலாம். ஆகையால் நீங்கள் பொறுமையை கையாளுவது மிகவும் சிறப்பு. தந்தையின் உடல்நிலையில் கவனம் இருக்கட்டும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். இன்று உங்களின் தன்னம்பிக்கையையும் திறமையும் வெளிப்படும் நாளாகவே இருக்கும். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே முடிந்தால் காக்கைக்கு அன்னமிட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |