சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ரகுபதி அதே பகுதியில் வசிக்கும் 9 வயது நிரம்பிய இரண்டு சிறுமிகள் மற்றும் 10 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து அறிந்த சிறுமிகளின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரகுபதியை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.