Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “நிதானமாக செய்தால் வெற்றி”… எதிர்ப்புகள் விலகி செல்லும்..!!

நேர்மையான எண்ணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே..!! இன்று பல வழிகளிலும் தனலாபம் ஏற்படும். ருசியான நல்ல உணவை நீங்கள் உண்டு மகிழ்வீர்கள். இன்று புத்தாடைகள் ஆகியவை கிடைக்கும். புத்தாடைகள் வாங்க கூடிய சூழல் இருக்கும். கிடைக்கும் பணத்தை வைப்புநிதியாக  போட்டு வைப்பது நல்லது. அதாவது சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம். அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். எதிர்ப்புகள் விலகி செல்லும். எல்லா வகையிலும் நன்மை இருக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும்.

குடும்பத்தில் கலகலப்பு, மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலையை  சந்திக்கக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்வது மிகவும் நல்லது. சக மாணவர்களிடம் பழகும்போது கொஞ்சம் ஒற்றுமையாக பழகுங்கள். பேசும்போது நிதானமாகப் பேசுங்கள். இன்று விளையாட்டு துறையில் நல்ல வெற்றி வாய்ப்பு கிடைக்கும். முடிந்தால் இன்று முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் மேற்கொண்டு இன்றைய  நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |