கனடாவின் பிரபல வங்கியில் பகல் நேரத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் கொள்ளையடித்து விட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கனடாவில் உள்ள Nova Scotia என்ற மாகாணத்தில் இருக்கும் Halifax என்ற நகரில் நேற்று மதியம் 12:30 மணியளவில், CIBC (Canadian Imperial Bank of Commerce) வங்கிக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்திருக்கிறார். வங்கி ஊழியர்களுக்கு அவரின் செயல்பாட்டில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் சுதாரிப்பதற்குள், அந்த நபர் தன் துப்பாக்கியை எடுத்து மிரட்டி பணம் கேட்டிருக்கிறார்.
அதன்பின்பு, அந்த நபர் பணத்துடன் உடனடியாக அங்கிருந்து தப்பிவிட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்நிலையில் பொதுமக்களிடம், அந்த நபர் கருப்பு கோர்ட் மற்றும் ட்ராக் பேன்ட் அணிந்திருந்ததாக கூறிய காவல்துறையினர், தகவல் அறிந்தவர்கள், தங்களிடம் உடனடியாக தெரிவிக்குமாறும் கூறியுள்ளார்கள்.