லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி நடிப்பில் கொரட்லா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவியின் 153-வது படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். இந்த படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும் .
— Mohan Raja (@jayam_mohanraja) August 20, 2021
இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரணின் கோணிடெலா நிறுவனமும், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாள் என்பதால் நாளை (ஆகஸ்ட் 21) மாலை இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.