தலீபான் தீவிரவாதிகள் ஜேர்மானியர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் அந்நாட்டின் முக்கிய நகரமான காபூலையும் தலீபான் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து தலீபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் காபூல் சென்றதிலிருந்து அங்கு பதற்றமான சூழ்நிலையே நிலவியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இதற்கிடையில் தலீபான் தீவிரவாதிகள் விமானத்தில் பயணிக்க சட்டபூர்வமாக உரிமை உள்ள மக்கள் மட்டும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மற்றவர்கள் வீட்டிற்கு செல்லுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
இதனைதொடர்ந்து விமான நிலையத்திற்குள் செல்லும் வழியில் தலீபான் தீவிரவாதிகள் சோதனை சாவடிகளை அமைத்து அவ்வழியாக செல்லும் மக்கள் அனைவரையும் அவர்கள் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் தலீபான் தீவிரவாதிகள் ஜேர்மனியர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்த ஜேர்மனியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் குழு தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவர் விரைவில் ஜேர்மனிக்கு நாடு கடத்தப்படுவார் என ஜேர்மனி அரசாங்க செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் தலீபான் தீவிரவாதிகளால் இதற்கு முன்பு ஜேர்மனியின் செய்தி தொடர்பாளரின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவமும் தற்போது ஜேர்மானியர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதும் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள வெளிநாட்டவர்கள் இடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.