சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் ஒருவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மணம்பாக்கம் அண்ணாநகர் பகுதியில் சிங்கார தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது உறவு கார 12 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்தச் சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.