கிராமத்தை பசுமையாக மாற்றுவதற்கு எல்லா வசதிகளையும் செய்து தருவது சம்பந்தமாக முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரசங்கால் ஊராட்சியத்தை பசுமை கிராமமாக மாற்றுவதற்கு அங்கே உள்ள அனைத்து பகுதிகளையும் முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் அந்த ஆய்வின் போது கழிவறை இல்லாத வீடுகளுக்கு கழிவறை வசதியை ஏற்படுத்தி தரவும் சாலை மற்றும் குடிநீர் வசதி என அனைத்து வசதிகளும் பெற்ற கிராமமாக முன்னேற்றுவதற்கு அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து நாற்றங்கால் பனையை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கே எத்தனை வகையான செடிகள் மற்றும் மரங்கள் உள்ளன என பதிவேட்டை பார்த்துயுள்ளார். அதன்பின் இவையெல்லாம் முறையாக பராமரிக்கப்படுகிறதா என கேட்டறிந்துள்ளார். பின்னர் செடிகளின் உற்பத்தி எண்ணிக்கை அதிகரிக்க காய்ந்த நிலையில் உள்ள செடிகளை மாற்றி புதிய செடிகள் அமைப்பதற்கும் காலியாக இருக்கும் இடங்களில் பலவகை சேர்ந்த கீரை வகைகள் மற்றும் மரங்களை நட்டு வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறைகள் குறித்தும் அதிகாரியிடம் திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.