Categories
உலக செய்திகள்

தலிபான்களின் ஒப்பந்தம்…. உண்மையை உடைத்த முன்னணிப் பேச்சுவார்த்தையாளர்….!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அமெரிக்காவுடன் போட்டுள்ள முக்கிய ஒப்பந்தம் தொடர்பான முக்கிய தகவலை தலிபான்களின் முன்னணி பேச்சுவார்த்தையாளர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக அமெரிக்க நாட்டின் அதிபர் அறிவித்த முதலில் இருந்தே தலிபான்கள் அந்நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றியுள்ளார்கள். இதனையடுத்து தலிபான்களின் முன்னணி பேச்சுவார்த்தையாளரான அனஸ் ஹக்கானி தலிபான் பயங்கரவாதிகள் குழு அமெரிக்காவுடன் போட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேறும் என்று அந்நாடு அறிவித்த இறுதி தேதி வரை தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் எதுவும் செய்யக் கூடாது என்பதாகும். ஆனால் இவ்வாறு தகவல் வெளியிட்ட தலிபான்களின் முன்னணி பேச்சுவார்த்தையாளர் கூறிய இந்த ஒப்பந்தம் அரசு சார்ந்த துறைகளில் மட்டுமா அல்லது வேறு நடவடிக்கைகளிலுமா என்பது குறித்த தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறியதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் இறுதி தேதிவரை தலிபான்கள் அந்நாட்டில் தங்களுடைய தலைமை தொடர்பாக எந்தவிதமான அறிவிப்பையும் விடுப்பதற்கு திட்டமிடவில்லை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |