மனைவியை கல்லால் தாக்கிய குற்றத்திற்காக கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூர் பகுதியில் ஷேக் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நிஷா மீது அப்துல்லாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நிஷா வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தபோது அப்துல்லா தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரை கல்லால் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த நிஷாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்துல்லாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.