Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. காதலால் நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காதல் விவகாரத்தில் வாலிபரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எலத்தகிரி பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அந்த இளம்பெண்ணின் சகோதரர் விக்னேஷை கண்டித்ததால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளில் மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த இளம் பெண்ணின் சகோதரர் மற்றும் அவருடைய தாயார் இணைந்து விக்னேஷை வழிமறித்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளனர். இதனால் காயம் அடைந்த விக்னேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த இளம் பெண்ணின் தாய் மற்றும் சகோதரர் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |