15 டன் ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயற்சி செய்த லாரி ஓட்டுநரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் ரேஷன் கடையின் அரிசிகளை கடத்துவதை தடுக்க பல நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மூலமாக ரேஷன் கடையின் அரிசிகளை கடத்துவதாக குடிமை பொருள் தாசில்தார் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் வாசுதேவன் தலைமையில் அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காவல்துறையினருடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது ஓட்டுநர் லாரியை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனை அடுத்து அந்த லாரியில் 15 ரேஷன் கடையின் அரிசிகளை கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அரிசி மற்றும் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.