கொரோனா விதிமுறையை பின்பற்றாத ஜவுளி கடைக்கு அதிகாரிகள் ரூ.5000 அபராதம் விதித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு வணிக கடைகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதாக புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் பேரில் செயல் அலுவலர் கணேசன் தலைமையில் ஊழியர்கள் தக்கோலத்தில் உள்ள தனியார் அலுவலகங்கள் மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சிறு கடைகள் உள்ளிட்டவைகளில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், அரசு வழிகாட்டும் விதிமுறைகளை கடைபிடிக்காமலும் இருந்ததால் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ரூ.5000 அபராதம் விதித்துள்ளார்.