Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆசிரியருக்கு நடந்த கொடுமை…. சோதனையில் சிக்கிய இருவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆசிரியையிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பஞ்சவர்ணம் சாலையோர கடையில் நின்று கொய்யாப்பழம் வாங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பஞ்சவர்ணம் அளித்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் வேங்கூர் பிரிவு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சிக்கந்தர் பாஷா மற்றும் பாதுஷா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து ஆசிரியரிடமிருந்து தங்க சங்கிலியை பறித்துச் சென்றது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து திருவெறும்பூர் பகுதியில் 4 ஆடுகளையும் திருடியுள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த நகை மற்றும் ஆடுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |