Categories
உலக செய்திகள்

தலீபான்களின் அதிகாரம்…. தவிக்கும் பெண்கள்…. வீடியோ வெளியிட்ட இளம்பெண் பத்திரிகையாளர்….!!

தலீபான் தீவிரவாதிகளின் அதிகாரத்தில் சிக்கி தவிக்கும் பெண்களின் நிலையை எடுத்துக்கூறி பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மேலும் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அப்போது தலீபான் தீவிரவாதிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். ஆனால் அவர்கள் சொன்ன வாக்கை மீறி பெண்களுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் உள்ள பெண் பத்திரிக்கையாளர் பலரையும் பணிநீக்கம் செய்யும் செயலில் தலீபான் தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொது இடத்தில் ஒரு இளம் பெண் பர்தா அணியாமல் இருந்ததால் அவரை  தலீபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் தீவிரவாதிகளின் அதிகாரத்தில் சிக்கி தவிக்கும் பெண்களின் நிலையை எடுத்துக்கூறி உதவ வேண்டும் என இளம்பெண் பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது “பெண்களால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியவில்லை. சாலைகளில் நடக்க முடியவில்லை. நகரம் முழுவதும் தலீபான் தீவிரவாதிகள் நிற்கின்றனர். இது என்னை போன்ற பெண்கள் அனைவருக்கும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர்களை பாதுகாக்கும் அமைப்புகள், மனித உரிமை மற்றும் பெண்கள் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்புகள் போன்றவைகள் நாங்கள் இங்கு படுகின்ற கஷ்டத்தை பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன். அதனால் எங்களுக்கு உதவுங்கள். மேலும் பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தலீபான் தீவிரவாதிகளால் தள்ளப்பட்டுள்ளனர்” என்று கவலையுடன்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |