ஆப்கானிஸ்தான் நாடு தொடர்பாக அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் எடுக்கும் முடிவுகள் எதிர்கட்சிகள் உட்பட அனைவருக்கும் அவருக்கு எதிரான கேள்வியை எழுப்பும் விதமாக அமைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் முழுவதும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றிய தலிபான்கள் கடந்த ஞாயிறு முதல் அந்நாட்டின் தலைநகரான காபூலையும் கைப்பற்றியுள்ளார்கள்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாடு தொடர்பாக அமெரிக்க அதிபரான ஜோ பைடன் எடுக்கும் முடிவுகள் எதிர்கட்சிகள் உட்பட அனைவருக்கும் அவருக்கு எதிரான பலவித கேள்வியை எழுப்பும் விதமாக அமைந்துள்ளது. இதற்கிடையே கடந்த 2012ல் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் குறித்து ஒசாமா பின்லேடன் அவருடைய ஆதரவாளரிடம் கூறிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாவதற்கு தகுந்த நபர் அல்ல என்பதும், அவர் அமெரிக்காவிலுள்ள எந்தப் பகுதியை வகித்தாலும் அந்நாட்டில் குழப்பமே உருவாகும் என்பதுமாகும்.