‘பீம்லா நாயக்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் சச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். தற்போது இந்த படம் தெலுங்கில் ‘பீம்லா நாயக்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சாகர் கே.சந்திரா இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா டகுபதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
THIS IS SOOOO COOOL !! ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Our #Leader Shri #PowerStar @PawanKalyan gaaru 🎬🎬📷
Jus wooooooow !! #JAN12 🎬📷 LETS SHOOT IT HIGHER #BheemIaNayak 🧨🧨🧨🧨🧨 #Trivikram gaaru @saagar_chandrak #BheemlaNayakFirstSingle ON #SEP2nd 🎬🎧https://t.co/QqNRi5tkbI— thaman S (@MusicThaman) August 21, 2021
இதில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க இருக்கிறார். சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் பீம்லா நாயக் படத்தின் பாடல் அப்டேட்டை இசையமைப்பாளர் தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற செப்டம்பர் 2-ஆம் தேதி இந்த படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது. மேலும் இந்த படம் வருகிற 2022-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.