தமிழகத்தில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் குறைந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் மக்கள் அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு இயல்புநிலைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிறு முழுவதும் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து பிற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை மளிகை, காய்கறி கடைகள், பேக்கரிகள் அனைத்தும் காலை 6 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும். உணவகங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. 12 இடங்களில் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.