தேனி மாவட்டத்தில் பிரபல தனியார் மசாலா நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்ட்டுள்ளது.
தேனி மாவட்டம் கோடாங்கி பட்டியல் இருக்கக்கூடிய ஈஸ்டர்ன் மசாலா நிறுவனத்தில் இருந்து பல பகுதிகளுக்கு மசாலா கொடுக்கப்படுகின்றது. இந்த நிறுவனத்தில் 400_க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல பணி தொடங்கிய போது தீடிரென தீ பற்றி எறிந்து விபத்துக்குள்ளாது. இதையடுத்து அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் அடித்ததை தொடர்ந்து அனைத்து பணியாளர்களும் வெளியே ஓடினர்.
இதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டுக்குள் தீ வராமல் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எறிந்து முழு கட்டிடமும் சேதமடைந்தது. இதையடுத்து மேலும் பல தீயணைப்பு வாகனகள் வரவழைக்கப்பட்டன.உள்ளே தீயால் பல்வேறு பொருட்கள் வெடித்துச் சிதறி எறிந்து வருவதால் அந்த பகுதியில் யாரும் நிற்பதற்கு , வேடிக்கை பார்ப்பது காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர்.