Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-மினி பேருந்து மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள வாடிகோட்டை பகுதியில் பட்டு கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பட்டு கண்ணன் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர்களான பவானி மற்றும் மாடசாமி போன்றோருடன் மோட்டார் சைக்கிளை சங்கரன்கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வாடிகோட்டைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் பவானி மற்றும் பட்டு கண்ணன் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பி விட்டனர்.

ஆனால் மாடசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடசாமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாடசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |