Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டல்…. வியாபாரி அளித்த புகார்…. கைது செய்த காவல்துறையினர்….!!

வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சீவலப்பேரி சாலையில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது பெருமாள்புரம் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் கந்தசாமியிடம் பழங்கள் வாங்க வந்துள்ளார்.

அதன்பின் மணிகண்டன் இலவசமாக பழங்கள் தருமாறு சட்டையில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி கந்தசாமியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து கந்தசாமி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |