தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் பூங்காவனம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பூங்காவனத்திற்கு வாழ்க்கையே வெறுத்துப் போனதால் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து விட்டு மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் பூங்காவனத்தை உடனடியாக மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் பூங்காவனத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆற்காடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.