தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க மாவட்ட தலைவர் களுக்கு தமிழக பாஜக சார்பில் இனோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று அப்போதைய தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
அதன்படி பாஜக வேட்பாளர்கள் எம்ஆர் கார்த்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் சென்றுள்ளனர். அவர்கள் வெற்றி பெற்ற மாவட்டங்களான ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பாஜக தலைவர்களுக்கு இன்று சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புதிய இன்னோவா காரை பரிசாக வழங்க உள்ளார்.