சட்டவிரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த 12 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிகமான விலைக்கு விற்பனை செய்த 12 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 300 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.